வவுனியாவில் இன்று அதிகாலை (05) இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் பெற்றோர், வாய்பேச முடியாதவர்கள் என அறிய முடிகிறது.