ரணிலை தொடர்ந்து அதிகாரத்தில் வைத்திருக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சி

ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்து  அதிகாரத்தில் வைத்திருக்கும் நோக்கத்துடன்  வெளிநாட்டு சக்திகள் செய்ற்பட்டுவருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி  நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறாவிட்டால் பெரும் குழப்பங்கள் ஏற்படலாம்.

இலங்கையின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, உலக ஒழுங்கை பேணுவதற்கு சமகால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அதிகாரத்தில் வைத்திருக்க வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.