இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்காவே என பிரித்தானியாவில் இருக்கும் கலாநிதி பிரபாகரன் (இராணுவ ஆய்வாளர்) தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆட்சி மாற்றத்திற்கு பின்னால் இருந்தது அமெரிக்கா. அமெரிக்காவிற்கு ஆதரவாக தான் சவேந்திர சில்வா இருந்திருக்கிறார்.
அவரின் நடவடிக்கைகளை பார்த்தால் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு தான் அவர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரும் இராணுவத்தை களமிறக்கவில்லை.
அதேநேரம் State Department பகிரங்கமாக அறிவித்துள்ளது, நாம் இலங்கை இராணுவத்தின் ஒவ்வொரு நகர்வையும் இரவு பகலாக அவதானிக்கிறோம் என.
எனினும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அமெரிக்கா சார்பானது என குறிப்பிட்டுள்ளார்.