ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் லாரியும், பேருந்துகளும் மோதிய விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகினர்.
தலைநகர் அபுஜாவில் உள்ள நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தை முந்த முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர் திசையில் வந்த லாரியின் மீது பலமாக மோதியது.
அடுத்த சில நொடிகளில் பின்னால் வந்த மற்றொரு பேருந்தும் லாரி மீது மோதி, 3 வாகனங்கள் மீதும் தீப் பிடித்துள்ளது.
இந்த கோர விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.