காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளிற்கு நீதி வேண்டும் என்பதை முன்னிறுத்தி வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்பாக 2000 நாட்களாக சுழற்சிமுறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கொடிகளை ஏந்திய பதாதைகளை ஏந்தி இருந்ததுடன், தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது படங்களையும் தாங்கியிருந்தனர்.
இதன்போது தாய்மார் கண்ணீர் மல்க கதறி அழுது தமது பிள்ளைகள் தமக்கு வேண்டும் எனக் கோரியிருந்தனர்.