வவுனியாவில்  ஹெரோயினுடன் 24 வயது யுவதி கைது!

வவுனியாவில் 5 கிராம்  ஹெரோயின்  போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்வி தலைமையிலான பொலிசார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்ப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதன்போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.