முல்லைத்தீவு, விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள இரானுவக் கவலனில் இருந்த இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து முரன்பாடுகாரணமாக கடந்த 18 ஆம் திகதி இரவு விசுவமடுசந்தியில் பெரும் அமையின்மை ஏற்ப்பட்டது.
இதன்காரணமாக பொதுமக்கள் இராணுவத்தினர் மீது போத்தல்கள் வீசப்பட்டதையடுத்து இராணுவத்தினர், மேல் நோக்கி துப்பாக்கிபிரயேகம் மேற்கொண்டனர்.
மேலும், ஒருசிலர் மீது இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவத்தின்போது இராணுவத்தினரின் செயற்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கான நஷ்டஈட்டினைப் பெற்றுத் தர வேண்டும் என்று மனித உரிமைகள் ஆனைக்குழுவிடம் தமது முறைப்பாட்டினை பதிவுசெய்யவுள்ளனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.