100ஆவது பிறந்த நாளில் கைதான பெண்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜீன் பிகெண்டனின் (Jean Bickenton) என்ற பெண்மணி தனது 100வது பிறந்தநாளில் தன்னை கைது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து தனது 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தனது ஆசையை நிறைவேற்ற போலீசார் அங்கு வந்து மிகுந்த அன்பு, மரியாதையுடன் அவரை கைது செய்துள்ளனர்.

ஜீன் பிக்கென்டன் பல வருடங்கள் இராணுவ செவிலியராக பணிபுரிந்துள்ளார்.

அவர் வாழ்க்கையில் ஒரு முறை கூட கைது செய்யப்படவில்லை. இந்த கனவை நனவாக்க, அவர் தன்னை கைது செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதனை நிறைவேற்ற போலீசார் அங்கு சென்று பெண்மணியை கைது செய்ததோடு இந்த சம்பவத்தை விவரித்து விக்டோரியா போலீசார் அவருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் “எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்” என்று அங்கிருந்த போலீசார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அத்தோடு அந்த பெண்மணியை மிகுந்த மரியாதையுடன் கைவிலங்கிட்டு அதிகாரப்பூர்வமாக கைது செய்துள்ளனர்.

இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளியிட்ட ஜீன் பிக்கென்டன் தனது மிக அற்புதமான பிறந்தநாள் விழாக்களில் ஒன்று என்று கூறியுள்ளனர்.