மத்திய பிரதேச மாநிலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று சுமார் 100 அடி உயர பாலத்தில் இருந்து நர்மதா ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
இந்தூரில் இருந்து புறப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவை நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து தார் மாவட்டத்தில் உள்ள கல்காட் பாலத்தின் வழியே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரை உடைத்துச் சென்று நர்மதா ஆற்றில் கவிழ்ந்தது.
மாநில பேரிடர் மீட்புப்படை குழுவினர் உள்ளூர் மீனவர்களுடன் இணைந்து ஆற்று நீரில் இருந்து 13 சடலங்களை கண்டெடுத்த நிலையில், பேருந்தில் மொத்தம் எத்தனை பேர் இருந்தார்கள் என தெரியாததால் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.