12 500 மெட்றிக் டொன் யூரியா உரம் நாட்டை வந்தடைந்தது.  

பெரும்போக பயிர்ச் செய்கைக்கு தேவையான இரசாயன உரம் அடங்கிய முதலாவது கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இதற்கமைய 12 ஆயிரத்து 500 மெட்றிக் டொன் யூரியா உரத்தினை ஏற்றிய கப்பல் இன்று நாட்டினை வந்தடைந்துள்ளது.

பெரும்போகத்திற்கு தேவையான யூரியாவினை இறக்குமதி செய்வதற்கு கோரப்பட்ட கேள்வி பத்திரத்திற்கு அமைவாகவே முதலாவது யூரியா தொகை நாட்டை வந்தடைந்துள்ளளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்றிக் டொன் யூரியா உரம் எதிர்வரும் கார்த்திகை மாத இறுதியில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தேவையாக உரத்தினை இறக்குமதி செய்வதற்கு உலக வங்கியினால் 110 மில்லியன் டொலர் கடனாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.