13 வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி  செய்த தினேஷ் சந்திமால்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தினேஷ் சந்திமால் தனது 13ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் ஸ்டீவ் ஸ்மித் 145 ஓட்டங்களையும், மார்னஸ் லாபுசாக்னே 104 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் ப்ரபாத் ஜயசூரிய 118 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதையடுத்து இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வருகிறது.