கொஸ்கம- சாலாவ தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கடந்த 3 நாட்களாக குறித்த மாணவி காணாமல் போயுள்ளார் என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மாணவி கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானப் பணிகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து நேற்று முன்தினம் (5) காலை 8 மணியளவில் சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.