14 வருடங்களில் 16 குழந்தைகள் பெற்ற காதல் தம்பதி

14 வருடங்களில் பதினாறு குழந்தைகளை பெற்றெடுத்த அமெரிக்காவைச் சேர்ந்த கார்லோஸ்-பேட்டி ஹர்னாண்டஸ் தம்பதியினர், 20 குழந்தைகள் வரை பெற்றெடுக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த இந்த தம்பதியினருக்கு ஆறு ஆண் குழந்தைகளும், பத்து பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் பேட்டி ஹர்னாண்டஸ்-க்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 17 ஆவது குழந்தையும் பிறக்க உள்ளது.

கருத்தடை செய்து கொள்ள மறுக்கும் இந்த தம்பதியினர், இன்னும் 3 ஆண் குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என விருப்பம் தெரிவிக்கின்றனர்.