15 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, இரண்டு படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது குறித்த இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கடற்படை தெரிவித்துள்ளது.