15 வது ஜனாதிபதியாக பழங்குடி இனத்தை சேர்ந்தவர் பதவியேற்பு.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி பதவியை நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்முவை வரவேற்றார்.

இதன் பின், நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து திரவுபதி முர்மு பதவி ஏற்பு உரை ஆற்றினார்.

குடியரசுத் தலைவராக நான் பதவியேற்று இருப்பது ஒவ்வொரு ஏழை இந்தியனின் சாதனை. பழங்குடியினத்தை சேர்ந்த நான் நாட்டின் குடியரசுத் தலைவராக பதவியேற்றது ஜனநாயகத்தின் மகத்துவம்.

நாட்டில் ஒவ்வொரு ஏழையும் குடியரசுத் தலைவராக முடியும் என்பதற்கு எனது வாழ்க்கையும் ஒரு முன் உதாரணம். என்னை குடியரசுத் தலைவராக தேர்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி.” என தெரிவித்தார்.