15 வயதுடைய மாணவர் மீது துப்பாக்கிச் சூடு. ; விசாரணை ஆரம்பம்.

மாத்தறை – திஹகொட பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மாத்தறை மனித உரிமை ஆணைய அலுவலகத்தின் குழுவொன்று இன்று குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெத்துள்ளது.

மாத்தறை திஹாகொட பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில்  பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்த சம்பவம் ஒன்று பதிவாகியது.

15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இச் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை மாணவர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் பயணித்த நிலையில் அதனை நிறுத்தி சோதனையிட சென்ற போது, திஹாகொட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனால் மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குறித்த மாணவன் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.