1648 இலங்கையர்களுக்கு வெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்ய அனுமதி.

ஆயிரத்து 648 இலங்கையர்களுக்கு வெளிநாட்டவர்களுடன் திருமணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் கடந்த 10 மாதங்களில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் வெளிநாட்டவர்களை திருமணம் செய்வதற்கான ஆயிரத்து 701 விண்ணப்பங்கள் கிடைத்தன. இவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் பிறந்தவர்கள்.

இந்த திருமணங்ளுக்கான அனுமதியை வழங்கும் போது, திருமணம் செய்வோரின் சுகாதார நிலைமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.