17 வயதுடைய பேஸ்புக் காதலர்கள் கைது.

தமது வீடுகளை விட்டு வெளியேறி நுவரெலியா நகரில் சுற்றித்திரிந்த 17 வயதான பேஸ்புக் காதலர்கள் இருவர், நுவரெலியா பொலிசாரால் மீட்கப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

முச்சக்கர வண்டி சாரதியொருவரினாலேயே அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனும், அம்பாறை பிரதேசத்தை சேர்ந்த அதே வயதுடைய மாணவியும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் பேஸ்புக் ஊடாக அறிமுகமாகி, காதலர்களாகியுள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி தனது தந்தையின் கையடக்க தொலைபேசியை எடுத்துக் கொண்டு மாணவி வீட்டை விட்டு வெளியேறி, அம்பாறைக்கு காதலனை தேடிச் சென்றுள்ளார்.

அன்றிரவு காதலனும் வீட்டை விட்டு வெளியேறி, பாணந்துறை பிரதேசத்தில் சந்தித்துள்ளனர்.

அன்றிரவு இருவரும் பாணந்துறை பேருந்து தரிப்பிடத்தில் தங்கியிருந்துள்ளனர்.

மறுநாள் அதிகாலை கொழும்பு சென்று அங்கிருந்து பஸ்ஸில் நுவரெலியா சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரும் நுவரெலியா நகரில் சுற்றித் திரிந்த வேளையில் கையில் பணம் இல்லாத காரணத்தினால் மாணவியின் கணனி மற்றும் மாணவனின் கையடக்கத் தொலைபேசியை விற்பனை செய்ய நுவரெலியா நகரில் வர்த்தக நிலையங்களிற்கு சென்றுளள்னர்.

அவர்கள் முச்சக்கர வண்டி சாரதியிடம் உதவிகோரிய போது, அவர் சமயோசிதமாக செயற்பட்டு, இருவரையும் பொலிசாரின் பொறுப்பில் ஒப்படைத்தார்.

இதன்மூலம், இருவரும் மோசடியாளர்களிடம் சிக்கி ஆபத்தை எதிர்கொள்வதிலிருந்து காப்பாற்ற முடிந்தது.

இந்த ஜோடியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

இருவரும் அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஜோடிக்கு உரிய வயது வந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்த பெற்றோர்கள், அவர்களை நேற்று தத்தமது வீடுகளிற்கு அழைத்துச் சென்றனர்.