17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பில் அவரது காதலன் உட்பட 8 இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 மற்றும் 21 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கம பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது சிறிய தாயுடன் பொசன் தினமான நேற்று தன்சலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது அவர் தனது சிறிய தாயிடம் புத்தகக் கடைக்குச் செல்வதாகக் கூறியதாகவும், பின்னர் காதலனைச் சந்திக்க நண்பரிடம் 300 ரூபாய் கேட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அங்கு அவர் தனது காதலனின் வீட்டிற்குச் சென்று அவருடன் உடலுறவு கொண்டுள்ளார், பின்னர் குறித்த சிறுமி காதலன் தனது மோட்டார் சைக்கிளில் ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் இறக்கிச் சென்றுள்ளார்.
இதற்கிடையில் காதலன் தனது நண்பர்கள் இருவரை அழைத்து தனது காதலியுடன் பேசி விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, அவரது நண்பர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் ஹங்வெல்ல ஆடிகல பகுதிக்கு வந்து, குறித்த சிறுமியிடம் பேசிவிட்டு, அப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மயானத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் அவர்களது நண்பர்கள் மூவரும் வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதன்போது இவர்களது இன்னொரு நண்பர் வீதியில் நின்று உளவு பார்த்துள்ளார்.
அதன் பின்னர், அந்த இடத்திற்கு அழைத்து வந்த இளைஞன், மீண்டும் சிறுமியை ஆடிகல சந்திக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வீட்டிற்கு செல்வதற்காக அவர்களிடம் பணம் கேட்டுள்ள நிலையில், அவருக்கு 40 ரூபாய் கொடுத்துள்ளனர்.
அப்போது, வீட்டுக்கு செல்ல முடியாமல், சிறுமி அழுது கொண்டிருந்த போது, அந்த இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸார் அதிகாரி ஒருவர் அவரிடம் விசாரணை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சிறுமி வாக்குமூலம் வழங்கியதையடுத்து பொலிஸார் அவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இவரை அழைத்துச் சென்ற இளைஞன், அருகில் இருந்த தன்சலில் வரிசையில் நின்றதை பார்த்த சிறுமி அவரை பொலிஸாரிடம் அடையாளங்காட்டிய பின்னர் ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரும் தனது நண்பர்கள் என கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், இன்று காலை சட்டத்தரணி ஒருவருடன் வந்து ஹங்வெல்ல பொலிஸில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அவருடன் சென்று சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய ஏனைய ஐந்து சந்தேக நபர்களையும் மேல்மாகாண தெற்கிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் கயங்க மாரப்பனவின் பணிப்புரையின் பேரில் நுகேகொடை பிரிவு குற்றப் விசாரணை பணியக அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு சிறுமியின் காதலனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் அவர் அதைத் தவிர்த்தால் பின்னர் அவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும் அவர்களில் ஒருவர் திருமணமானவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவு பார்த்த நபரை கைது செய்ய உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜயசுந்தரவின் பணிப்புரையின் பேரில் மற்றுமொரு பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவரது காதலன் மற்றும் அவரது நண்பர்கள் குழுவினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதும் தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.