19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்குள் நுழையும்  இலங்கை தமிழர்.

தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

கனிஸ்டன் குணரத்னம் இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19 வயதுக்குட்பட்ட சுப்பர் மாகாண போட்டித் தொடரில், 11 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.