டெல்லியில் 50 கிலோகிராம் எடையுள்ள 200 கோடி ரூபாய் பெறுமதி கொண்ட சூடோ பெட்ரைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அண்மையில் இந்த போதை பொருளை கடத்தி வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதன்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரே இந்த கடத்தல் குழுவின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டது தெரியவந்துள்ளது.
எனவே, அவரை கைது செய்வதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது.
தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவோடு போதை பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து ஈடுபட்டுள்ளது.
கடந்த 3 வருடங்களில் கிட்டத்தட்ட 45 முறை போதைப் பொருள்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்தியிருப்பதாகவும், அவற்றின் மொத்த மதிப்பு ஏறக்குறைய ரூ.2000 கோடிக்கு மேல் இருக்கும் என கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.