22 ரயில்கள் ரத்து – இலங்கை ரயில்வே திணைக்களம்

ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திட்டமிடப்பட்ட 22 ரயில்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து சிக்கல்கள் காரணமாக ரயில்வே ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில் பயணங்களில் அலுவலக ரயில்கள் சிலவும் அடங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.