22 வயது இளம் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த அதிபர் கைது

இளம் பெண் ஆசிரியை ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றின் 60 வயதுடைய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தனியார் பாடசாலை நேற்று (17) மூடப்பட்டிருந்த போதிலும் சந்தேகநபரான அதிபர் 22 வயதுடைய இளம் ஆசிரியையை விசேட கடமையின் காரணமாக பாடசாலைக்கு வருமாறு அறிவித்துள்ளார்.

பின்னர், உரிய அறிவிப்பை தொடர்ந்து, இந்த ஆசிரியர் நேற்று மதியம் பாடசாலைக்கு வந்தார்.

ஆசிரியை தனது கடமைகளை முடித்துக் கொண்டு வெளியில் செல்ல தயாரான போது சந்தேகநபரான அதிபர் அவரை கட்டிப்பிடித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர், அந்த ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்று மினுவாங்கொடை பொலிஸ் குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தில் முறைப்பாடு செய்தார்.

அதனையடுத்து, இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகத்தின் பேரில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இளம் ஆசிரியருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

சந்தேகத்திற்குரிய அதிபரிடம் மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.