24.5 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்னுடன் ஒருவர் கைது.

பெருந்தொகையான கொக்கேயினுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொக்கேயினின்   பெறுமதி 24.5 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்கத் தகவலின்படி, சந்தேக நபர் கொலம்பியாவில் இருந்து கட்டார் எயார்வேய்ஸின் QR – 662 விமானத்தின் ஊடாக நாட்டுக்கு வந்துள்ளார்.

தொலைநகல் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களுக்குள் மறைத்து வைத்துவைக்கப்பட்டிருந்த குறைந்தது 5 கிலோ எடையுள்ள கொக்கைன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.