கர்நாடகா – பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி அருகே கொன்னூரை சேர்ந்த பாரதி 35 வயது நிரம்பிய பெண் 25 விரல்களுடன் ஒரு குழந்தையை பிரசவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. உடல் ஆரோக்கியத்துடன் பிறந்த அந்த குழந்தையின் கால், கை விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்துள்ளது.
வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும், இரு கால்களிலும் தலா 6 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது.
மேலும், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரல்களின் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதால் பயப்பட தேவையில்லை” எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.