26 தொடருந்து சேவைகள் ரத்து.

தொடருந்து சாரதிகள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் காரணமாக இன்றைய தினத்தில் இதுவரையில் 26 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

தொடருந்து நேர ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி தொடருந்து சாரதிகள் நேற்று மதியம் முதல் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை 11 அலுவலக தொடருந்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.