3 எரிபொருள் தாங்கிகளின் அனுமதிப்பத்திரம் உடன் அமுலாகும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
3 எரிபொருள் தாங்கி ஊர்திகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்ட விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்ட காணொளிகள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும். என அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.