ஹாங்காங் அருகே தென் சீன கடல் பகுதியில் 30 பணியாளர்களுடன் சென்ற கப்பல், மோசமான வானிலை காரணமாக நடுக்கடலில் மூழ்கிய சம்பவத்தில், 12 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
ஹாங்காங் அருகே சாபா சூறாவளி உருவாக்கிய ராட்சத அலைகளால் தொழில்துறை பயன்பாட்டுக் கப்பல் இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.
விமானம் மற்றும் உலங்கு வானுர்திகளில் விரைந்து சென்ற மீட்புக் குழுவினர், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து 4 பேரை மீட்டனர்.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், 12 பேரின் உடல்களை மீட்புப் படையினர் கண்டெடுத்துள்ளனர்.