37 சீன பிரஜைகளுக்கு விளக்கமறியல்.

வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த 37 சீன பிரஜைகள் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 5 சீன பெண்களும் 6 வயது குழந்தையும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.