4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் கைது.

நான்கு கோடி ரூபாய் பெறுமதியான தங்கப்பாளங்களுடன் டுபாயில் இருந்து வந்த இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 16 தங்கப்பாளங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.