4 நாட்களில் “வெந்து தணிந்தது காடு” திரைப்பட வசூல்.

சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “வெந்து தணிந்தது காடு”.

பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

சிம்புவின் திரைப்பயணத்தில் முதல் நாளில் பெரிய வசூல் பெற்ற திரைப்படமாக மாநாடு தான் திகழ்ந்து வந்தது.

அப்படத்தை பின்னுக்கு தள்ளி தற்போது “வெந்து தணிந்தது காடு” முதல் நாளில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக மாறியுள்ளது.

இதனிடையே இப்படம் வெளியாகி 4 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை இப்படம் செய்துள்ள மொத்த வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி   “வெந்து தணிந்தது காடு”  4 நாட்களில் உலகளவில் ரூ. 50. 56 கோடி வரை வசூலித்துள்ளதாக அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.