46 இலட்சம் இந்திய ரூபாவை திருடிய 4 இலங்கையர்கள் கைது.

மகிழுந்தில் இருந்து பெருந்தொகை பணத்தை திருடிய குற்றச்சாட்டில் நான்கு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்..

தி ஹிந்துஸ்தான் டைம்ஸின் கூற்றுப்படி, பஞ்சாபில் உள்ள லூதியானா காவல்துறை, ஒரு கும்பலுடன் தொடர்புடைய இலங்கையைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தது.

அவர்கள் மகிழுந்துகளின் கண்ணாடிகளை உடைத்து இந்திய நாணய பெறுமதியில் சுமார் 57.40 லட்சம் ரூபாவை திருடியதாகக் கூறப்படுகிறது.

தமிழ் பேசுபவர்களென கூறப்படும் குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 46.50 இலட்சம் ரூபாவை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் புது டில்லி மற்றும் பிற மாநிலங்களில் தற்காலிக குடியிருப்புகளில் வசித்து வந்தனர் என்றும் கடந்த காலங்களில் பல திருட்டுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.