இந்தியாவின் புனே பகுதியில் தாங்கி ஊர்தி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் 48 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக புனே தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புனே – பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள நவாலி பாலத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புனே தீயணைப்புப் படை மற்றும் மீட்ப்புக்குழுக்கள், மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளன.
தாங்கி ஊர்தி ஒன்றின் தடுப்பு செயலிழந்து பல வாகனங்கள் மீது மோதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின்போது, வீதியில் எண்ணெய் கசிந்து வழுக்கும் தன்மையுடையதாக மாறியதால் குறித்த வீதியில் 2 கிலோமீற்றர் தூரத்துக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.