5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்டு தாய்  தற்கொலை.

வத்தளை, கதிரான பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற பெண்ணொருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஊன்றுகோலின் உதவியுடன் வந்த பெண், நேற்று இரவு குழந்தையைத் தள்ளிவிட்டு தானும் ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, அதைப் பார்த்த பாதசாரிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தினர்.

அந்த பெண் ஹெந்தல பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஆற்றில் தள்ளிவிடப்பட்ட சிறுவனை தேடும் பணிகள் நடந்து வருகிறது.