5 வருடத்திற்கு பிறகு வசூல் சாதனையை முறியடித்த “விக்ரம்”.

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டு வருகிறது கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வெளியான இப்படத்தில் கமல்ஹாசனை தாண்டி ஃபகத் பாசில், விஜய் சேதுபதி,  சூர்யா  என பலர் நடித்துள்ளனர்.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கியுள்ள இப்படம் அவரின் கடின உழைப்பை காட்டுகிறது.

அதற்கு பரிசாக தான் கமல்ஹாசன் அவருக்கு ஒரு கார் பரிசளித்துள்ளார், அவரது உதவி இயக்குனர்களுக்கும் கார் வழங்கப்பட்டது.

தமிழக பாக்ஸ் ஆபிஸில் மற்ற மொழி படங்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களில் பாகுபலி 2 படம் முதலிடத்தில் இருந்து வந்தது.

தற்போது 5 வருடத்திற்கு பிறகு வசூல் சாதனையை முறியடித்து யாரும் செய்யாத சாதனையை செய்துள்ளது கமல்ஹாசனின் விக்ரம். படம்.

இதுவரை தமிழகத்தில் ரூ. 155 கோடி வரை வசூலித்துள்ளது.