50 கண்ணீர் புகை குண்டுகளுடன் ஒருவர் கைது.

ஜூலை 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களால் வலுக்கட்டாயமாக எடுத்துச் செல்லப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (17) வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் ஒபேசேகர புர நாணயக்கார மாவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பொரளை கோதமிபர பகுதியில் அவர் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டில் இருந்து 50 கண்ணீர் புகை குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபர் பொலன்னறுவை காஷ்யபபுர பிரதேசத்தில் வசிக்கும் 31 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.