6 மாதங்களில் இலங்கையை விட்டு ஓடிய 1486 வைத்தியர்கள்.

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருடம் முதல் 6 மாதங்களில் மட்டும் 1486 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இலங்கை மருத்துவ பேரவையின் தரவுகள் பிரகாரம்,  இந்த வருடம் தை மாதம் 138 வைத்தியர்களும், மாசி மாதம் 172 வைத்தியர்களும், பங்குனி மாதம் 198 வைத்தியர்களும், சித்திரை மாதம் 214 வைத்தியர்களும், வைகாசி மாதம் 315 வைத்தியர்களும், ஆனி  மாதம் 449 வைத்தியர்களும்  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இவர்கள்  இலங்கை வைத்திய பேரவையிடமிருந்து நற்சான்றிதழ் பத்திரத்தையும் பெற்ற பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக அறிய முடிகிறது.