6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை  கொடுத்த நடிகர் கைது.

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சினிமா துணை நடிகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

எலி திரைப்படத்தில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்த ராஜூ என்கிற எலி ராஜூ, சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இவர் அதே குடியிருப்பில் வசித்து வரும் 6 வயது சிறுமி, வீட்டின் மேல் மாடிக்கு விளையாட வந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.

இதனடிப்படையில், நடிகர் ராஜூவை பிடித்து போலீசார் விசாரித்ததில் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.