60 அடி ஆழத்தில் கடலுக்கு அடியில் யோகாசனம் செய்த நபர்.

யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியை சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஒருவர் கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் யோகாசனம் செய்தார்.

கடலில் சிக்கியவர்களை மீட்பதற்காக காவலர்களுக்கு ஆழ்கடல் நீச்சல் பயிற்சி அளித்து வரும் அரவிந்த் என்ற இந்த நபர், ஏராளமான வண்ண மீன்களுக்கு மத்தியில் வித விதமான யோகாசனங்களை செய்து காட்டினார்.