62 வயதில் மூன்றாவது  திருமணம் செய்த வாரிசு பட நடிகை

வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா தனது 62 வயதில் வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.  என செய்தி வெளியாகி இருக்கிறது.

தன் திருமணம் குறித்து ஜெயசுதா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

பிரபல தெலுங்கு நடிகை ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர் 2017-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து தனிமையில் இருந்து வந்த நடிகை ஜெயசுதா தற்போது வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார்.

ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர்
ஜெயசுதாவின் கணவர் நிதின் கபூர்

தன் திருமணம் குறித்து ஜெயசுதா எதுவும் தெரிவிக்காததால், இந்த செய்தி அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் நடிகை தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியத் திரையுலகில் பல மொழிகளில் பணியாற்றியது மட்டுமல்லாமல் அரசியல்வாதியாக மாறிய பிரபல நடிகை ஜெயசுதா முன்னதாக தயாரிப்பாளர் வட்டே ரமேஷின் சகோதரரை மணந்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. பின்னர், அவர் 1985-ல் தயாரிப்பாளர் நிதின் கபூரை மணந்தார். இந்த தம்பதிக்கு நிஹார் மற்றும் ஸ்ரேயன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் டோலிவுட்டில் நடிகராக அறிமுகமாகினர். இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது.

நிதின் கபூர் பைபோலார் டிஸ்ஸார்டர் என்ற உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2017-ம் ஆண்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயசுதா, தனியாகவே இருந்து வந்தார். தற்போது 62 வயதாகும் ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துள்ளார். சமூக வலைதளத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஜெயசுதா தனது பன்னிரண்டாவது வயதில் கமல்ஹாசனுடன் 1972 -ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ’பண்டாண்டிகபுரம்’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

1975-ல், அவர் தெலுங்கு திரைப்படமான ’லக்ஷ்மண ரேகா’வில் முன்னணி நடிகையாக அறிமுகமானார். மற்றும் ’ஜோதி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பிறகு, அவர் தெலுங்கு படங்களில் பெரிய நட்சத்திரமாகி,  மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். இன்றும் தெலுங்கு மற்றும் தமிழில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த ’வாரிசு’ படத்தில் விஜய் அம்மாவாக நடித்தார்.