67 பயணிகளுடன் சென்ற விமானம் வெடித்து சிதறியது..!!

கஜகஸ்தான் நாட்டில் 67 பேருடன் (62 பயணிகள், 5 பணியாளர்கள்)
 
 சென்ற பயணிகள் விமானம் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானின் அக்டாவ் நகருக்கு அருகே பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக கஜகஸ்தான் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளதாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் ரஷ்யாவின் செச்சினியாவில் உள்ள பாகுவிலிருந்து கஜகஸ்தானின் க்ரோஸ்னிக்கு சென்று கொண்டிருந்தது, ஆனால் க்ரோஸ்னியில் பனிமூட்டம் காரணமாகத் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், அக்டாவ் நகருக்கு அருகே வெடித்துச் சிதறியது.

விமானத்தில் பயணித்த 67 பேரில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளதாகவும், 22 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்கு முன் விமானம் வானத்தில் பலமுறை வட்டமடித்தது. எனினும், சிறிது நேரத்திலேயே விமானத்தில் தீப்பற்றி வெடித்துச் சிதறியது.