இலங்கை சந்தையில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விலை சடுதியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குத்தகை நிறுவனங்கள் தங்கள் வட்டி விகிதங்களை கடுமையாக உயர்த்தியுள்ளமை, உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் அவற்றின் விலை அதிகரிப்பு வாகனங்களில் விலை சரிவில் தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்போது சந்தையில் பிரபலமான வாகனங்களின் விலைகள் பின்வருமாறு குறைந்துள்ளன.
Vitz (2018) – 60 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Premio (2017) – 137 லட்சம் / முந்தைய விலை 150 லட்சம்
Aqua G (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
Vezal (2014) – 63 லட்சம் / முந்தைய விலை 80 லட்சம்
Fit (2012) – 50 லட்சம் / முந்தைய விலை 60 லட்சம்
Graze (2014) – 70 லட்சம் / முந்தைய விலை 85 லட்சம்
X-trail (2014) – 85 லட்சம் / முந்தைய விலை 100 லட்சம்
WagonR (2014) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Alto (2015) – 27 லட்சம் / முந்தைய விலை 34 லட்சம்
Alto japan (2017) – 39 லட்சம் / முந்தைய விலை 45 லட்சம்
Panda (2015) 21 லட்சம் / முந்தைய விலை 25 லட்சம்