தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 17 பேர் பலியாகினர்.
அதிபராக இருந்த காஸ்டிலோ பதவி நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஸ்டிலோ-வை விடுவிக்கக் கோரியும், தற்போதைய அதிபர் டினா பொலுவார்ட் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் நாடு முழுவதும் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலியாக்கா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போலீசார் விரட்டியடித்தனர்.