அமெரிக்காவில், சிறிய ரக மருத்துவ அவசர காவு உலங்கு வானூர்த்தி விபத்தில் சிக்கியதில் 2 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
அலபாமா மாகாணத்தில் உள்ள செல்சியாவில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்தவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக, மருத்துவமனைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து 3 பணியாளர்களுடன் மருத்துவ உலங்கு வானூர்த்தி புறப்பட்டுச் சென்றது.
சிறிது நேரத்தில், உலங்கு வானூர்த்தி தீ பிடித்து கீழே விழுந்ததாகவும், அதிலிருந்தவர்களில் ஒருவர் அதே இடத்தில் இறந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகிறது.