கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நதாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
பௌத்தம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களை இழிவுபடுத்தியதாகத் தெரிவிக்கப்படும் யுவதி ஒருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (27) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு நதாஷா என்ற யுவதிக்கு கிடைத்தது. அதன் தொடக்கத்திலிருந்தே, அவர் பௌத்தம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களை அவமதித்து பார்வையாளர்களை சிரிக்க வைத்தார்.
பௌத்த பாடசாலைகள் குறித்தும் அவர் பொதுவெளியில் கடுமையாக விமர்சித்தார். அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் அவமதிப்பு மட்டுமின்றி கெட்ட வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடியுரிமை அமைப்பும் இன்று காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளதுடன், பௌத்த மதத்தை இழிவுபடுத்திய மேற்படி யுவதியை உடனடியாக கைது செய்யுமாறும் தெரிவித்துள்ளது.