பெய்ஜிங்-கில் தொடர் கனமழை ; 11 பேர் பலி

சீன தலைநகர் பெய்ஜிங்-கில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தாக்கிய டோக்சுரி சூறாவளியால் கடந்த சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

பெய்ஜிங், டியாஞ்சென் போன்ற நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கில் 50 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 2 பேர் உள்பட 11 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

மாயமான 27 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்களில் சிக்கிக்கொண்ட இரண்டாயிரத்து 800 பேருக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.