கனடாவின் ஒன்றாரியோவைச் சோந்த மருத்துவர் ஒருவர் சக மருத்துவ பணியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
குறித்த மருத்துவருக்கு 18 மாத கால பணி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சத்திர குறித்த மருத்துவர், சத்திர சிகிச்சைகளை 18 மாதங்களுக்கு மேற்கொள்ள முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த ஆண் மருத்துவர் சக மருத்துவ பெண் பணியாளரை, தனது அந்தரங்கப் பகுதியை பரிசோதனை செய்யுமாறு கூறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவர் இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டிலும் இதே விதமான குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்பு பட்டிருந்தார் எனவும் அப்போதும் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு தடவைகள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த சத்திர சிகிச்சை நிபுணரின் பணி 18 மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.