இரண்டு பேருந்துகள் மோதி விபத்து – 15 பேர் காயம்!

கொழும்பு – கண்டி  பிரதான வீதியின் வேவல்தெனிய பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
 
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
 
சம்பவத்தில் காயமடைந்த 15 பேரும் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விபத்தை அடுத்து குறித்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.