மட்டக்களப்பில் மினி சூறாவளி -12 வீடுகள் சேதம்!

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருமிச்சை பிரதேசத்தில் நேற்று (04) மாலை வீசிய மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், 12 வீடுகள் சேதமடைந்துள்ளன.
 
இதனால் மனித பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
 
மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து வீடுகளின் கூரை ஓடுகள், தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டதுடன், சில வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.