ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களே!

அரசமைப்பின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம்  ஐந்து வருடங்களே என சட்டமா அதிபர்  திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சட்டமா அதிபர் சார்பில் உயர்நீதிமன்றில் ஆஜராகிய பிரதிசொலிசிட்டர் ஜெனரல் கனிஸ்க டிசில்வா  இதனை  தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதி தேர்தலிற்கு இடைக்கால தடைவிதிக்கவேண்டும்  என கோரி வர்த்தகர் சமிந்திரன் தயான் லெனாவா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மனுவை தள்ளுபடி செய்யக்கோரி பூர்வாங்க ஆட்சேபணைகள் எழுப்பப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.